ஹைக்கூ

வரிசையாய் கிடத்தப்பட்டிருந்தன
சவப்பெட்டிக்கடையில்
ஆணிகள்.

....................................................

இரவுக் குளம்
மீன்கள் விளையாடும்
கோபுர உச்சியில்.

.....................................................

பகலில் சிறுவர்கள் எறிந்தபந்து
இரவில் மிதக்கிறது
கிணற்றில் நிலா.

......................................................
மாட்டுவண்டியில்
வந்து சேர்ந்தது
அரசனின் இருக்கை.
 
............................................................

No comments: