Friday, June 4, 2010

மழையோடு போய்

தலைவலியை
காணாமல் போகச்செய்து
திவ்யமாய்ப் பெய்கிறது
மாலை நான்கிலொரு மழை.
பல்லடம் வரை
சென்றுவர நினைத்தது
எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று.
its raining here என்றொரு குறுந்தகவலை
அவளுக்கனுப்பிவிட்டு
மழை பார்த்தேன்.
சில துளிகள்
மேனியில் பட்டு சிலிர்த்தது.
கண்டக்டரின் விசில் சத்தம்
குளுமையாய் இருந்தது.
ரஹ்மானின் பாடலொன்று
செல்லமாய் அதிர்ந்துகொண்டிருந்தது.
மழையின் மகிழ்ச்சி
பேருந்து முழுக்க பரவி
பள்ளிவிட்டுத்திரும்பிய
குட்டிப்பையன்கள் விழிகளை
அகல விரித்துப் பேசினார்கள்.
அருகில் இருந்தவர்
வெகு இயல்பாய்
எங்கே போறீங்க
என்று கேட்டார்.
சில பெயர்கள்
மனசுக்குள் மந்திரம் போல
மிதந்தெழும்பின.
மணி கல்யாணம்
எவ்வளவு அழகாக நடந்திருக்கிறது!
மழையில் சுழலும்
மின்காற்றாடி பற்றி
அதிதிக்கு சொல்ல வேண்டும்.
வந்துவிட்டது என் நிறுத்தம்.
குளிர் சுவாசத்தோடு
இறங்கியவனை வரவேற்றார்கள்
பேருந்து நிறுத்தம் முழுக்க இருந்தவர்கள்
பூப்போட்ட பிளாஸ்டிக் குவளைகளில்
தேநீர் அருந்தியபடி.

3 comments:

Anonymous said...

Congratulations!

Anonymous said...

congratulations anna . wish you many more awards.adutha bookla en drawings use pannunga. pachayappan suresh.

Aathira mullai said...

கவிதைகள் மட்டும் அல்ல பிளாக்கும் வெகு நேர்த்தியாக் மிளிர்கிறது. எழுத்தெண்ணிப் படித்தேன். நலமா கவின்? முடிந்தால் கண்டு பிடிங்கள் நான் யார் என்று. எப்படி போகிறது ஆய்வு?