Friday, April 30, 2010

ப்ரவீணாக்குட்டியிடம்
கதையொன்று
சொல்லச்சொல்லிக் கேட்டேன்.
எதிர்கேள்விகள் கேட்கக்கூடாதென்ற
நிபந்தனையோடு
குள்ள மனிதர்கள் பற்றி
அவள் சொன்ன
கதையில் வந்த
ராட்சசனை விடவும்
பெரியது
அவளிடம் கதைகேட்ட
என் மகிழ்ச்சி.
கதையின் நீதி
யாதெனில்
குழந்தைகளிடம் கதை கேட்டால்
பெரியவர்களும் குழந்தைகளாகலாம் என்பதுவே

1 comment:

ஸ்வரூப் said...

அந்த கதை நீதி மட்டும் சொல்லாம இருந்தேன்னா கவிதை கொஞ்சம் நல்லா இருக்கும் ...